IND vs WI : நாளைய 4 ஆவது போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா? – வெளியான அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி அமெரிக்காவில் நாளை நடைபெற உள்ளது.

Thomas

- Advertisement -

இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த நான்காவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயம் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா நான்காவது போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தற்போது 4-ஆவது போட்டிக்கு முன்பாக காயத்திலிருந்து ரோஹித் சர்மா முழுவதுமாக குணமடைந்துவிட்டதால் நாளைய நான்காவது போட்டியில் நிச்சயம் ரோஹித் சர்மா விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : மைதானத்தில் பொறுமையிழந்து ரோஹித் சர்மா கோபப்பட்ட 5 தருணங்கள் – விவரம் இதோ

அதேபோன்று இந்த தொடரில் பவுலிங் மோசமாக செயல்பட்டு வரும் ஆவேஷ் கான், மற்றும் பவுலிங்கில் சொதப்பி வரும் ஷ்ரேயாஸ் ஐயரும் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement