9 முறை டாடி சதம்.. சத்தமின்றி டேவிட் வார்னரின் உலக சாதனையை சமன் செய்த ஹிட்மேன் ரோஹித்

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 3 வகையான போட்டிகளிலும் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை அவர் இந்தியாவின் கேப்டனாக வென்று சாதனை படைத்துள்ளார்.

அதே வேகத்தில் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெறுவதே அவருடைய திட்டமாகும். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து ரோஹித் சர்மாவை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகின்றது. அதனுடைய முதல் படியாகவே இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து அவரை நீக்கிய தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

9 டாடி சதங்கள்:

அதற்காக மனம் வருந்தாத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். அதன் காரணமாக 38 வயதில் ஐசிசி ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி அவர் சாதனையும் படைத்துள்ளார். அந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும் அவர் சிக்கிமுக்கு எதிரான முதல் போட்டியில் 155 ரன்களை குவித்து மும்பை வெற்றி பெற உதவினார்.

அப்போட்டியில் 237 இலக்கைத் சேசிங் செய்த மும்பைக்கு அட்டகாசமாக விளையாடிய ரோஹித் சர்மா 18 பௌண்டரி 9 சிக்சர்களை பறக்க விட்டுட்டு 155 (94) ரன்களை விளாசினார். அதனால் 30.3 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை எளிதாக வென்றது. இதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 9வது முறையாக 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

உலக சாதனை சமன்:

குறிப்பாக இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் (209, 264, 150, 171*, 208*, 152*, 162, 159) என 8 முறை 150+ ரன்களை அடித்துள்ள ரோஹித் சர்மா தற்போது மும்பைக்காக முதல் முறையாக 150+ ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக முறை டாடி சதங்கள் எனப்படும் 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னரும் 9 முறை 150+ ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட காரணமே கவுதம் கம்பீர் தான் – மான்டி பனேசர் கருத்து

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக (8) முறை 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் ரோஹித் சர்மா பெயரில் இருக்கிறது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (7 முறை) இருக்கிறார். தற்போது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வார்னர் சாதனையை சத்தமின்றி சமன் செய்துள்ள ரோஹித் 2027 உலகக் கோப்பையில் விளையாட தகுதியானவர் என்பதை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement