நேற்று நடந்த போட்டியில் சோர்ந்து போன சிராஜ், ஆறுதல் கூறிய ரோகித்சர்மா – விவரம் உள்ளே

rohit
- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தியா – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 17ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.ஆரம்பம் முதலே இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவரும் இந்தியஅணியின் கை மேலோங்கியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டாஸ்வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.முதலில் விளையாடிய இந்திய அணி 20ஓவர்களின் முடிவில் 170 ரன்களை எடுத்தது.பின்னர் களமிறங்கிய வங்கதேச அணிவீரர்கள் ஆரம்பம் முதலே ஒருபக்கம் தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மற்றொருபுறம் இந்திய அணி பவுலர்களான சிராஜ் மற்றும் ஷர்துல் தக்கர் பந்துகளை விளாசி தள்ளினர்.

siraj

வாஷிங்டன் சுந்தர் மட்டும் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். 4ஓவர்களை வீசிய வாஷிங்டன் சுந்தர் 23 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 3விக்கெட்டுகளை சாய்த்தார்.நேற்றைய ஆட்ட நாயகனான அணி கேப்டன் நேற்றைய ஆட்டத்தின் போது சோர்ந்து போன சிராஜூக்கு ஆறுதல் கூறும் வகையில் பேசினார். சிராஜ் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்றார்.

Advertisement