இரண்டாவது டி20 போட்டி : சப்போர்ட் ஸ்டாப்பிற்கு பின்னால் மறைந்து சாப்பிடும் ரோஹித் – வைரலாகும் வீடியோ

Rohith

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஜேசன் ராய் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 28 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

kohli 3

அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஓய்வு காரணமாக இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்று கேப்டன் கோலி அறிவித்திருந்தால் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் போட்டி நடைபெறும் போது மைதானத்தில் விளையாடாத வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் ஆகியோர் அமரும் இடத்தில் உட்கார்ந்து ரோகித் வீரர்களை உற்சாகப் படுத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியின்போது அவர் பென்சில் இருந்தபடி வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி ஒருகட்டத்தில் சப்போர்ட் ஸ்டாப்கள் அமர்ந்திருக்கும் ஒரு இருக்கைக்கு பின்புறம் அமர்ந்திருந்த ரோகித் சாப்பிட்டுக்கொண்டே போட்டியை ரசித்து கொண்டிருந்தார். அதனை மைதானத்தில் இருந்த கேமராக்கள் லாவகமாக படம்பிடித்தன.

- Advertisement -

மேலும் மறைந்து மறைந்து அவர் சாப்பிட்ட அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வீடியோ வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.