இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க வீரருமான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பின்னர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் ரோஹித் சர்மா :
அதனை தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் என்னுடைய அடுத்த இலக்கு என்றும் அறிவித்து தற்போது அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் இந்திய அணிக்காக அவர் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த தொடருக்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் அடுத்ததாக இந்திய அணிக்காக விளையாடுவார்.
அதனால் இடைப்பட்ட காலத்தில் அவருக்கு நிறையவே ஓய்வு நேரம் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் மாற்றுவதற்காகவும், பி.சி.சி.ஐ கொடுக்கும் அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும் தற்போது ரோகித் சர்மா புதிய முடிவு ஒன்றினை கையிலெடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் மும்பை அணிக்காக விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. இந்த ஆண்டு நடைபெற்று வரும் 18-வது சையத் முஷ்டாக் அலி தொடருக்கான போட்டிகள் அகமதாபாத், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு இது ஒரு ஹேபிட்.. அதனால் தான் ஈஸியா செஞ்சுரி அடிக்குறாரு – சேவாக் புகழாரம்
இவ்வேளையில் இந்த தொடரில் தான் மும்பை அணி சார்பாக அவர் அடுத்த சுற்று போட்டிகளில் விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சர்வதேச டி போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் அவர் அதற்கு முன்னதாக தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அவர் விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



