- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தானாகவே முன்வந்து முக்கிய முடிவை எடுத்துள்ள ரோஹித் சர்மா.. இந்திய டெஸ்ட் அணியின் புதிய – கேப்டன் யார்?

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வி மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட தோல்வி என அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்விகளால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. இதன் காரணமாக அப்போதே இந்திய அணியின் டெஸ்ட் அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ரோஹித் சர்மா தானாக முன்வந்து எடுத்துள்ள முடிவு :

அந்த ஆஸ்திரேலியா தொடரின் போது 3 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தானாகவே அந்த போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக பும்ரா அந்த இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். இதன் காரணமாக ரோகித் சர்மா அப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தான் ஓய்வுபெறப்போவதில்லை என்றும் ஓய்வு குறித்து எந்த எண்ணமும் இல்லை என ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதற்கடுத்து நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியதால் அவர் மீது இருந்த விமர்சனங்கள் அனைத்தும் மறைந்தன.

ஆனால் தற்போது 38 வயதினை நெருங்கியுள்ள ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதினால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சுழற்சியை கருத்தில் கொண்டு இந்திய டெஸ்ட் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டது. அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்றும் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா தாமாகவே முன்வந்து விலக இருக்கிறார் என்ற நம்பத்தகுந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. மேலும் இந்திய அணியிலிருந்து அவர் விலகினாலும் ஓய்வை அறிவிப்பாரா? என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இங்கிலாந்து தொடருக்கான அணியில் இருந்து ரோஹித் சர்மா தானாக விலகினால் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புக்காக பேசப்படுகிறது.

இதையும் படிங்க : என்னையா ஏலத்துல எடுக்கல.. ஊதா தொப்பியை கைப்பற்றியதோடு அசத்தல் சாதனையையும் நிகழ்த்திய – ஷர்துல் தாகூர்

ஏனெனில் பும்ரா தற்போது காயத்தினால் அவதிப்பட்டு வருவதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை அவரால் முழுவதுமாக விளையாட முடியுமா என்று கேள்வி உள்ளது. அதன் காரணமாகவே புதிய கேப்டனாக சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -