- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆவது இந்திய வீரராக ஹிட்மேன் ரோஹித் சர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான ரோகித் சர்மா 73 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 75 ரன்கள் குவித்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.

4 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

ஆனாலும் அவர் இந்த போட்டியில் அடித்த 75 ரன்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 14-வது சர்வதேச வீரராகவும், நான்காவது இந்திய வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அப்படி ரோகித் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது 27 ரன்களை அவர் கடந்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 20,000 ரன்கள் கடந்து சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த 14-வது சர்வதேச வீரராக சாதனை நிகழ்த்தினார்.

அதோடு இந்திய அணி சார்பாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து நான்காவது வீரராகவும் இமாலய சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தினார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனத்தை செலுத்தி விளையாடி வருகிறார்.

- Advertisement -

இவ்வேளையில் அடுத்த 2027 ஒருநாள் உலக கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 23 வயதிலேயே 6 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

தற்போது 38 வயதான ரோஹித் சர்மா அடுத்த 2027 ஒருநாள் உலககோப்பை தொடரின் போது 40 வயதை எட்டுவார் என்பதால் அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்து வரும் வேளையில் ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -