150 சிக்ஸ்.. கங்குலியின் வாழ்நாள் சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித்.. 3வது இந்தியராக சாதனை

Rohit sharma 73
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அடுத்ததாக 2வது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா நிதானமாக விளையாடிய நிலையில் கேப்டன் சுப்மன் கில் 9 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த ராசியான அடிலெய்ட் மைதானத்தில் முதல் முறையாக டக் அவுட்டானார்.

- Advertisement -

ஹிட்மேன் அசத்தல்:

கடந்த போட்டியில் ஏற்கனவே டக் அவுட்டான அவர் இப்போட்டியிலும் 0 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி பரிதாப சாதனை படைத்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.

3வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை ஓரளவு சரிவிலிருந்து காப்பாற்றியது. அதில் அரை சதத்தை அடித்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (87) ரன்னில் அவுட்டானார். இதையும் சேர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் 3 விதமான கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மா 150 சிக்ஸர்கள் கடந்துள்ளார்.

- Advertisement -

கங்குலியை முந்திய ஹிட்மேன்:

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் 150 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். அத்துடன் இன்றையப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து ஒருநாள் போட்டிகளில் ரோஹித் 11249 ரன்களை 48.69 சராசரியில் குவித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 3வது அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சௌரவ் கங்குலியின் வாழ்நாள் சாதனையையும் ரோஹித் உடைத்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் இந்திய வீரராகவும், 5 ஆவது சர்வதேச வீரராகவும் ஆஸி மண்ணில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ஹிட் மேன்

இதற்கு முன் அந்த சாதனை 11221 ரன்கள் அடித்த சௌரவ் கங்குலியிடம் இருந்தது. தற்போது அவரை முந்தியுள்ள ரோஹித் சர்மா 18426, 14181 ரன்களுடன் முதல் 2 இடங்களில் இருக்கும் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு பின் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் மறுபுறம் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதத்தை அடித்து 61 ரன்னில் அவுட்டானார். அதனால் இப்பதிவிடும் போது இந்தியா 35 ஓவரில் 168/4 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement