ராகுல் டிராவிட் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா.. சச்சினையும் முந்தி வரலாற்று சாதனை

Rohit Sharma 22
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நழுவ விட்ட இந்தியா சமன் செய்தது. ஆனால் 2வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, கமிண்டு மெண்டிஸ் 40, வெல்லலாகே 39 ரன்கள் எடுத்தனர்.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 (44) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து விராட் கோலி, சிவம் துபே, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 42.2 ஓவரில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இலங்கைக்கு அதிகபட்சமாக ஜெப்ரி வேண்டர்சே 6 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் டி20 தொடரில் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகளை நிறுத்தியுள்ள இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் நல்ல துவக்கத்தை பெற்றும் கடைசியில் தோற்றது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முன்னதாக கடந்த போட்டியை போலவே இப்போட்டியிலும் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் திணறலாக விளையாடிய அதே பிட்ச்சில் கேப்டன் ரோஹித் சர்மா அட்டகாசமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். குறிப்பாக 5 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட அவர் 64 (44) ரன்கள் குவித்தார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 10831 ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 4வது இந்திய வீரராக முன்னேறி சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா ஜாம்பவான் ராகுல் டிராவிட் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 18426
2. விராட் கோலி : 13872
3. சௌரவ் கங்குலி : 11221
4. ரோஹித் சர்மா : 10782*
5. ராகுல் டிராவிட் : 10768

இதையும் படிங்க: 10 வருட சொதப்பல்.. 27 வருடம் கட்டிக்காத்த சாதனையை கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே காற்றில் விட்ட இந்தியா

அது போக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த துவக்க வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் உடைத்துள்ள ரோஹித் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 120 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா இப்போட்டியையும் சேர்ந்து 121 முறை 50+ ரன்கள் அடித்து அந்த சாதனையை உடைத்துள்ளார்.

Advertisement