- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாபரை முந்திய ரோஹித் சர்மா புதிய உலக சாதனை.. தோனி கூட செய்யாத ஸ்பெஷல் ஹாட்ரிக் சாதனை

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்து சுமாராக பேட்டிங் செய்து 103 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஸ்பெஷல் சாதனை:
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனால் இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த வெற்றியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டனாக 49 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பாகிஸ்தானின் பாபர் அசாம் சாதனையை உடைத்துள்ள ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பாபர் அசாம் 48 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனையாகும். இது போக கடந்த 2023 ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடியது.

- Advertisement -

அப்படியே கடந்த 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த வரிசையில் தற்போது 2024 ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் 2023 ஜூன் – 2024 ஜூன் மாதத்திற்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான ஐசிசி உலகக் கோப்பையின் ஃபைனலுக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தொடர்ச்சியாக (ஹாட்ரிக்) தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்நேரம் தெ.ஆ பயந்துருப்பாங்க.. ஃபைனலில் ஜெய்க்க இந்தியா ஒரு மாற்றத்தை செஞ்சாகனும்.. அக்தர் ஆலோசனை

இதன் வாயிலாக ஒரே வருடத்திற்குள் 3 விதமான ஐசிசி தொடர்களின் ஃபைனலுக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை ரோஹித் அடைத்துள்ளார். இதற்கு முன் தோனி, விராட் கோலி கூட இந்த சாதனையை படைத்ததில்லை. அத்துடன் கேன் வில்லியம்சனுக்கு பின் 3 விதமான ஐசிசி உலகக்கோப்பை ஃபைனலுக்கு தனது தேசிய அணியை அழைத்துச் சென்ற 2வது கேப்டன் என்ற பெருமையும் ரோஹித் பெற்றுள்ளார்.

- Advertisement -