இந்திய அணி வரும் மாதங்களில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால் அவர்கள் அனைவருக்கும் ‘யோ யோ’ எனப்படும் பிட்னஸ் டெஸ்ட் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
ஜூன் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஹிட் மேன் என்றழைக்கபடும் ரோஹித் ஷர்மா பங்கேர்க்காமல் இருந்து வந்தார். இதனால் இவர் இந்திய அணியில் இனிவரும் தொடர்களில் பங்கேற்க மாட்டாரா என்ற எண்ணம் எழுந்தது. இருப்பினும் ரோஹித் ஷர்மாவிற்கு மறு வாய்ப்பு வழங்கபட்டிருந்தது. சில காரணங்களால் யோ யோ டெஸ்டில் பங்கேற்காமல் இருந்த இவர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி பங்குபெற்றார்.
பெங்களுரில் உள்ள தேசிய விளையாட்டு அகாடமியில் ‘யோ யோ’ டெஸ்டில் நிர்ணயிக்கபட்ட 16.3 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றார். இதன் மூலம் இந்திய அணி வரும் மாதங்களில் விளையாட உள்ள இயர்லாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளுடன் மோதும் தொடர்களில் ரோஹித் பங்குபெறுவது உறுதியாகியுள்ளது. ஒரு வேலை ரோஹித் இந்த தேர்வில் தோற்றிருந்தால் அவருக்கு பதிலாக அஜிங்கியா ரஹானே தேர்வாகி இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது இதில் பிரச்சனை என்னவெனில் மற்ற வீரர்கள் அணைவரும் இந்த டெஸ்டில் முன்னதாகவே பங்குபற்று இருந்தனர்.
ஆனால். ரோஹித் ஷர்மாவிற்கு மட்டும் எப்படி தனியே இந்த டெஸ்ட் வைக்கப்பட்டது என்றும், இதனால் இவர் உண்மையிலேயே தேர்ச்சி பெற்று விட்டாரா என்று விமர்சங்கங்கள் எழுந்தது.சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா “நான் எப்படி நேரத்தை செலவழித்துள்ளேன் என்று யாரும் கவலைபட வேண்டாம். என்னைப்பற்றி குறை கூறி வரும் சில நபர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் யோ யோ டெஸ்டில் தேர்வடைய ஒரு வாய்ப்பை தான் எடுத்துக் கொண்டேன். ஒரு செய்தியை வெளியிடும் முன் அதை பற்றி ஆராய்வது நல்ல விடயம் ” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.