- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டிகளானது இன்னும் சில தினங்களில் துவங்கி நடைபெற இருக்கிறது.

ரோஹித் மற்றும் பாண்டியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பி.சி.சி.ஐ :

இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றிருந்த வேளையில் கடந்த 2026 ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் அடைந்த காயம் காரணமாக விராட் கோலி இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவற விடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதேவேளையில் ரோகித் சர்மா இந்த தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் : பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்ட வேளையில் அவர் பெங்களூருக்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.

அதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான ஹார்டிக் பாண்டியாவும் தனது உடற்தகுதியை சரியான முறையில் நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை பி.சி.சி.ஐ மூலம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா மற்றும் பாண்டியா ஆகியோர் பெங்களூரு சென்று தங்களது உடற்தகுதியை நிரூபித்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்களுக்கு விளையாடுவதற்கான தடையில்லா சான்றிதழை தேசிய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிடம் இருந்து தான் இந்த விஷயங்களை கற்றுக்கொண்டேன் – திலக் வர்மா வெளிப்படை

இதன் மூலம் அவர்கள் எதிர்வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடரை குறிவைத்து ரோகித் சர்மா விளையாடி வரும் வேளையில் அவருக்கு இந்த தொடரானது மிக முக்கியமான ஒரு தொடராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -