
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார். கடந்த எட்டு மாதங்களில் இந்திய அணிக்காக இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த அவரை எதிர்வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன்னதாக பிசிசிஐ கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவரது கரியர் முடிவுக்கு வரும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ரோகித் சர்மாவோ 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்ற பின்னரே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உறுதியாக உள்ளார். இதன் காரணமாக அவரது உடற்தகுதியில் தற்போது மிகத் தெளிவாக பணியாற்றி மிகச் சிறப்பான மாறுதலை கொண்டு வந்துள்ளார். அதாவது கடந்த மூன்று மாதங்களில் அவர் தற்போது 20 கிலோ எடையே குறைத்திருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட அவரது உடற்பகுதி மிகப்பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டிருந்த வேளையில் அவர் தனது தோற்றத்தை ஒல்லியாக மாற்றி முழு பிட்னஸை எட்டி இருக்கிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த தனியார் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவிற்கு வந்திருந்த ரோகித் சர்மா புதிய லுக்கில் படு ஸ்லிம்மாக மாறியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. 2027 உலக கோப்பையை மனதில் வைத்து தான் ரோகித் சர்மா தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடற்தகுதியை மேம்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : இதெல்லாம் வட்டம்.. ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டது சரியே.. ரசிகர்கள் விமர்சிக்காதிங்க.. ஷமி வெளிப்படை
இப்படி உடற்தகுதியை மேம்படுத்துவதன் மூலம்களத்தில் நீண்ட இன்னிங்ஸ் விளையாட முடியும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தான் சரியாக இருந்தால் மட்டுமே உலகக் கோப்பையை விளையாட முடியும் என்பதனாலும் ரோகித் சர்மா இப்படி ஒரு பிளானை மனதில் வைத்து உடல் எடையை குறைத்திருக்கிறார் என்றும் தெரிகிறது.