சச்சின், விராட், தோனி, டிராவிட் ஆகியோருக்கு அடுத்து 5 ஆவது வீரராக நாளை ரோஹித் சர்மா – நிகழ்த்தவிருக்கும் சாதனை

Rohit Sharma
- Advertisement -

கடந்த 2007-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான ரோகித் சர்மா இதுவரை 67 டெஸ்ட் போட்டிகள், 159 டி20 போட்டிகள் மற்றும் 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தை எட்டியுள்ளதால் இனி அவர் விளையாடப்போகும் தொடர்கள் அனைத்தும் அதிகளவில் கவனிக்கப்படும் தொடர்களாக மாறியிருக்கிறது.

5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்தவிருக்கும் சாதனை :

அந்த வகையில் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாட இருக்கிறார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்த அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் இனி முழுநேர துவக்க வீரராக மட்டுமே இந்திய அணியில் நீடிக்க இருக்கிறார். எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இனி ரோகித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்று பேசப்படுகிறது. ரோஹித் சர்மாவும் 50 ஓவர் உலக கோப்பை தொடரை கைப்பற்றிய கையோடு ஓய்வு பெற வேண்டும் என்று தீவிரமாக தனது உடற்தகுதி மற்றும் பேட்டிங் ஃபார்மில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் ரோகித் சர்மா சர்வதேச போட்டியில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ் தோனி, ராகுல் டிராவிட் ஆகிய நான்கு பேருக்கு அடுத்து மிக முக்கியமான சாதனை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

சர்வதேச போட்டிகளில் அனைத்து வகையான பார்மெட்டையும் சேர்த்து அதிக ஆட்டங்களில் விளையாடிய இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் 664 ஆட்டங்களில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி இந்திய அணிக்காக 550 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதற்கடுத்து மூன்றாம் இடத்தில் தோனி 538 ஆட்டங்களிலும், ராகுல் டிராவிட் நான்காவது இடத்தில் 509 ஆட்டங்களிலும் விளையாடி உள்ளனர்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அவர் இஷ்டத்துக்கு அப்படியே விளையாடட்டும் – ஆரோன் பின்ச் ஆதரவு

இவர்கள் நால்வருக்கு அடுத்து ஐந்தாவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நாளைய போட்டியில் விளையாடுவதன் மூலம் 500 ஆவது ஆட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். நாளை அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் போட்டி அவரது 274-ஆவது போட்டியாகும். அதோடு ஒட்டுமொத்தமாக அவர் இந்திய அணிக்காக விளையாடும் 500-வது ஆட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement