இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தான் யார் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட இந்திய அணி அந்த போட்டியை சமனில் முடித்தது. இதன் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 40 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 40 ரன்களையும், வெல்லாலகே 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது போன்று இரண்டாவது போட்டியிலும் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 44 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தான் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடுவதாக கூறி இருந்த ரோஹித் சர்மா முதலாவது போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : எங்களோட நட்பு பணத்துக்காக வந்ததில்லை.. என்னிடம் விராட் கோலி இந்த தாக்கத்தை ஏற்படுத்திருக்காரு.. டு பிளேஸிஸ்

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் இந்த போட்டியிலும் அவர் நினைத்திருந்தால் சதத்தை நோக்கி சென்றிருக்கலாம். ஆனால் அதை தவிர்த்து ரன் ரேட்டில் மட்டுமே மும்முரமாக இருந்தது 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement