5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார் ஏன் விளையாடவில்லை? சப்பை கட்டு கட்டிய – கேப்டன் ரோஹித் சர்மா

Rajat-Patidar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதியான இன்று தரம்சாலா நகரில் துவங்கியது. இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையிலேயே இந்திய அணி இத்தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதன்காரணமாக நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கடந்த மூன்று போட்டிகளாக சொதப்பி வந்த ரஜத் பட்டிதார் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருந்த இடதுகை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல்லுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்த தொடரில் இரண்டாவது போட்டியில் அறிமுகமான ரஜத் பட்டிதார் அடுத்தடுத்த மூன்று வாய்ப்புகளில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே அவர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது.

இவ்வேளையில் அவர் எதிர்பார்த்த படியே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இந்த ஐந்தாவது போட்டியில் ஏன் விளையாடவில்லை? என்பது குறித்த தகவலை கேப்டன் ரோகித் சர்மா டாசின் போது தெரிவித்தார். அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் : காயம் காரணமாகவே இந்த போட்டியில் அவர் தேர்வு செய்யப்பட முடியாமல் போனது என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதோடு பிசிசிஐ வெளியிட்ட தகவலிலும் : ரஜத் பட்டிதார் தனது இடது கணுக்காலில் நேற்று மாலை வலைப்பயிற்சியில் காயம் அடைந்ததால் இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த தகவல் அவரை வெளியேற்றுவதற்காகவே கூறப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஷ்வினுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அளித்த மரியாதை – நெகிழ்ச்சி சம்பவம்

ஏனெனில் சரியாக போட்டி துவங்கும் நாளுக்கு முந்தைய நாள் மாலை எவ்வாறு அவருக்கு காயம் ஏற்படும்? என்றும் ரோகித் சர்மா இந்த விடயத்தில் சப்பை கட்டு கட்டியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement