- Advertisement -
ஐ.பி.எல்

தவான், கோலி, வார்னர் ஆகியோரது சாதனையை சமன் செய்த ஹிட்மேன்.. சி.எஸ்.கே அணிக்கெதிராக – தரமான சம்பவம்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.எஸ்.கே அணிக்கெதிராக ரோஹித் சர்மா அசத்தல் சாதனை :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் துபே ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது 45 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா நான்கு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 76 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் அவர் அடித்த இந்த அரைசதம் மூலம் சிஎஸ்கே அணிக்கு எதிராக விராத் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் நிகழ்த்தியிருந்த ஒரு சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சமன் செய்த சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி, டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் தலா 9 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்கு எதிராக அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் கேப்டனாகும் தகுதி ரெய்னாவுக்கு இருந்தும் அவங்க விடல – ஹர்பஜன் சிங் ஆதங்கம்

இந்நிலையில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக அடித்த அரைசதத்தின் மூலம் ரோகித் சர்மாவும் சிஎஸ்கே அணிக்கு எதிராக 9 அரைசதங்களை அடித்து அவர்களது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -