கெயிலின் சாதனையை டி20 யில் தட்டி தூக்கிய ஹிட்மேன் ரோஹித் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டி நேற்று இரவு ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Ind-vs-Wi

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். அதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.அப்போது மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது மழை தொடர்ந்து நிற்காமல் இருந்ததால் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று இந்த போட்டியில் ரோகித் சர்மா டி20 போட்டியில் சிறப்பான சாதனை ஒன்றைப் படைத்தார். அது யாதெனில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை கெயில் வைத்திருந்தார்.

rohith 1

இந்த சாதனையை ரோகித் சர்மா நேற்று 3 சிக்சர்கள் அடித்தன் மூலம் அதனை தகர்த்துள்ளார். இதன்மூலம் ரோகித் சர்மா அதிக சிக்ஸர்கள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement