- Advertisement -
ஐ.பி.எல்

டி20 கிரிக்கெட்டில் 2 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா படைத்த புதிய சாதனை – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது அகர்வால் மற்றும் தவான் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 198 ரன்களை குவித்தது.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியோடு சேர்த்து மும்பை அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் 17 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் மூலம் 28 ரன்களை குவித்தது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அதன்படி நேற்றைய போட்டியில் 28 ரன்கள் அடித்தன் மூலம் ரோகித் இந்த ரன்களோடு சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோலி டி20 கிரிக்கெட் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா 2 ஆவது இந்திய வீரராக 10 ஆயிரம் ரன்களை டி20 கிரிக்கெட்டில் கடந்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகளை அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் ரோகித்சர்மா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் மட்டுமல்ல டி20 உலககோப்பை வாய்ப்பும் பறிபோகும் சோகத்தில் சி.எஸ்.கே வீரர் – அடப்பாவமே

மும்பை அணிக்காக கேப்டன்சி செய்வது மட்டுமின்றி விராட் கோலியின் விலகலுக்கு பிறகு இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தற்போது ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பம்சம்.

- Advertisement -
Published by