இனி தோனியால் இது முடியும்னு எனக்கு தோணல. அவர் கடைசி கட்டத்தில் உள்ளார் – ரோஜர் பின்னி வெளிப்படை

Roger

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக ஆடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது தனது 39வது பிறந்தநாளை கொண்டாடிவிட்டார். மீண்டும் அவரை இந்திய அணியின் உடையில் பார்த்து விட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் ஆடுவது உறுதி.

Dhoni

ஒருவேளை ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால் இந்திய அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்புகள் பெரிதாக இருக்கிறது. இது குறித்து பல முன்னாள் வீரர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரும், அணியின் தேர்வு குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரோஜர் பின்னி தோனியின் உடல் தகுதி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் :

தோனியை கடந்த மூன்று வருடங்களாக கவனித்து வருகிறேன். அவரை தொடர்ந்து கவனித்து வந்தால் அவரது கிரிக்கெட் காலம் கடந்து விட்டதை நாம் அறிவோம். அவர் உடல் தகுதியை இழந்துவிட்டார். மேலும் அவரது இடத்தினை பிடிக்க அவரை தொடர்ந்து பல இளம் வீரர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

Dhoni-1

அவர்களுக்கு அவர் வழிவிட வேண்டும். வெகு சீக்கிரத்தில் தோனி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் தேர்வு குழுவினருடன் பேசுவார். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என, என்று பேசியுள்ளார் ரோஜர் பின்னி. தோனி ஓய்வு முடிவினை அறிவிப்பது அவரது விருப்பம் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.

- Advertisement -

Dhoni

ஆனாலும் தோனி இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. மேலும் இந்த ஐ.பி.எல் தொடர் முடிந்த பின்னரே அவர் தனது ஓய்வு குறித்து பேசுவார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கும் அவர் தேர்வாகாத பட்சத்தில் அவர் கண்டிப்பாக ஓய்வை அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.