விராட் கோலியை அவுட் ஆக்கணுனா இந்த ஒரு பந்து போதும் – ஆட்டநாயகன் ராபின்சன் பேட்டி

Robinson-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது.

Robinson-1

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் என 7 விக்கெட்டை வீழ்த்தி அசத்திய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மேலும் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த ராபின்சன் விராத் கோலி விக்கெட்டை வீழ்த்துவது குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஆட்டநாயகன் விருது பெற வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. அதை நான் இன்று அடைந்துள்ளேன்.

robinson

மைதானத்தின் தன்மைக்கு ஏற்றாற் போல் பந்து வீசியதால் என்னால் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. மேலும் பந்துவீசும் போது அடிக்கடி சீனியர் வீரரான ஆண்டர்சனிடம் சில அறிவுரைகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சொன்ன அறிவுரைகளை பயன்படுத்தி பந்து வீசியதால் சிறப்பாக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது. மேலும் கோலி விக்கெட்டை வீழ்த்துவது எப்போதும் சிறப்பான ஒன்று.

robinson

முதலில் அவர் இரண்டு பவுண்டரி அடித்தார். அதன்பின்னர் அவரது விக்கெட்டை வீழ்த்தியது மிக பெருமையாக கருதுகிறேன். கோலியின் விக்கெட்டை வீழ்த்தும் திட்டம் என்பது சுலபம்தான். கோலியை அடிக்க விட்டு பிறகு நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்பில் பந்து வீசினால் எட்ஜாகி ஆட்டமிழந்துவிடுவார் என்று கருதினோம். அதே போல் தான் நடந்தது இனிவரும் போட்டிகளிலும் விராட் கோலியை அவுட் ஆக்குவேன் என ஒல்லி ராபின்சன் பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement