
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்விக்கு துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானது முக்கிய காரணமானது. முன்னதாக 2023 காலகட்டங்களில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடிய கில் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறினார்.
அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் சாம்சனை புதிய ஓப்பனிங் ஜோடியாக உருவாக்கியது. அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் சாதனைகளைப் படைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்த அவரிடம் 21 முறை டக் அவுட்டாகாத வரை தொடர்ந்து வாய்ப்பளிப்போம் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வாக்குறுதி கொடுத்தார்.
அந்த நிலையில் திடீரென சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்த கம்பீர் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பில் இதுவரை கில் சுமாராகவே விளையாடி வருகிறார். மறுபுறம் 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் ஓரளவு நன்றாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய சாம்சனை இத்தொடரில் கம்பீர் மொத்தமாக கழற்றி விட்டுள்ளார்.
இந்நிலையில் எந்த தவறும் செய்யாத சாம்சனை சொதப்பும் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கில் விளையாட வைக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி கௌதம் கம்பீரை அவர் விமர்சித்து பேசியது பின்வருமாறு. “அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஜோடியை மாற்றும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்? சம்சானுக்கு முன் கில் டி20 அணியில் இருந்தார் என்று சூரியகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”
“ஆனால் சாம்சன் வாய்ப்பைப் பெற்ற போது 3 சதங்கள் அடித்தார். அதன் பின்பே அபிஷேக், திலக் வர்மா ஆகியோரும் சதங்களை அடித்தார்கள். எனவே அவருடைய சதம் நமது இளம் வீரர்களை உத்வேகமடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் இந்தியாவுக்காக அடுத்த டி20 ஓப்பனர் யார்? என்ற நிலைமையே இருந்தது. அந்த சூழ்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார்”
இதையும் படிங்க: கண்டிப்பா அவங்க மீண்டும் இதை செய்து பார்முக்கு வருவாங்க.. கேப்டன் மற்றும் து.கேப்டனுக்கு – அசிஸ்டன்ட் கோச் ஆதரவு
“இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக கழற்றி விட்டுள்ளீர்கள். சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி. தற்சமயத்தில் துணைக் கேப்டனாக இருந்தாலும் கில்லுக்கு எதுவும் வேலை செய்யாததால் அழுத்தத்திற்குள் இருக்கிறார். எனவே பெரிதாக எந்த தவறும் செய்யாத சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.