- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தங்கம் மாதிரி ஒரு வீரர் இருக்கும்போது அவர் ஏன் பிளேயிங் லெவனில் விளையாடல – ராபின் உத்தப்பா ஆதங்கம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே குவித்தது.

சூரியகுமார் யாதவ் செய்த தவறே தோல்விக்கு காரணம் :

இதன் காரணமாக 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 16-வது ஓவரின் போது ஏழு விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு இருந்தும் சூரியகுமார் யாதவ் செய்த தவறுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மாறியுள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் தடுமாறினார்கள். குறிப்பாக அச்சர் பட்டேல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே தான் விட்டுக் கொடுத்திருந்தார். எனவே அந்த சூழலில் கடைசி நேரமாக இருந்தாலும் ரவி பிஷ்னாய் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் ஓவர்களை வீசியிருக்க வேண்டும்.

ஆனால் கேப்டன் சூரியகுமார் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவரை வழங்காமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் அவரது அந்த தவறான முடிவே தோல்விக்கு காரணமாக மாறியது. இப்படி முழுநேர சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேலை வைத்துக்கொண்டு ஒரே ஓவர் வீசுவதற்கு அவர் ஏன் அணியில் இடம்பெற வேண்டும்? அவருக்கு பதிலாக ரமன்தீப் சிங்கை ஆல்ரவுண்டராக கொண்டு வந்திருக்கலாம்.

- Advertisement -

ஏனெனில் ரமன்தீப் சிங் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறேன். அதுமட்டும் இன்றி கடந்த சில காலமாக அவர் தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு நல்ல ஆல்ரவுண்டராகவும், ஒரு ஃபினிஷராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : கண்டிப்பா நீங்க இதுக்காக எங்களை திட்டுவதை இருகரம் கொண்டு ஏற்றுக்கொள்கிறேன் – கவுதம் கம்பீர் அதிரடி

ஒருவேளை அவர் அணியில் இருந்திருந்தால் ஹார்டிக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக அவரால் செயல்பட முடியும். அவரைப்போன்ற ஒரு தங்கமான ஆல்ரவுண்டர் இருக்கும்போது அவர் பிளேயிங் லெவனில் விளையாடாதது எனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -