இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்தியா தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்விக்கு பெரும்பாலான இந்திய வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
அதே சமயம் சோதனைகள் என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்த மாற்றங்களும் தோல்விக்கு வித்திட்டன. எடுத்துக்காட்டாக சிறப்பாக பந்து வீசும் அர்ஷ்தீப் சிங்கை முதல் 2 போட்டிகளில் பெஞ்சில் அமர வைத்த அவர் எப்போதாவது மட்டுமே அசத்தக்கூடிய பிரசித் கிருஷ்ணாவை விளையாட வைத்தார். அனைத்தையும் விட ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய கடைசி 8 போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்றது.
பயிற்சியாளர் முறை:
ஆனால் திடீரென அவரை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது பெரிய பின்னடைவாக அமைந்தது. ஏனெனில் அனுபவமற்ற அவருடைய தலைமையில் இந்தியா கடைசி 6 போட்டிகளில் 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் வெவ்வேறு ஃபார்மெட்டில் விளையாடுவதால் மனதளவில் சோர்வு ஏற்படும் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
எனவே கௌதம் கம்பீரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்திய அணி பயிற்சியாளர் பதவியை பிரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதாவது டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளர்கள் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு. “கேக்கை வெட்டுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன”
உத்தப்பா கருத்து:
“வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் இருப்பதை நான் வெளிப்படையாக வரவேற்கிறேன். ஏனெனில் இந்தியா நிறைய கிரிக்கெட்டில் விளையாடுகின்றது. நீங்கள் ஒரு வடிவத்தில் விளையாடி விட்டு மற்றொரு வடிவத்திற்கு நகரும் போது மனதளவில் பெரிய சோர்வு ஏற்படும். சில நேரங்களில் நீங்கள் நுகரப்படுவீர்கள். அதனால் நீங்கள் மற்றொரு வடிவத்திற்கு தயாராக முடியாது. உங்களுக்கு மனதளவில் புத்துணர்ச்சியும் சக்தியும் தேவை”
இதையும் படிங்க: இந்தியா – நியூசி முதல் டி20 நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“அந்தக் கோணத்தில் வெவ்வேறு பயிற்சியாளர்கள் முறை வேலை செய்யும் என்று கருதுகிறேன். அணியாக வேலை செய்ய வேண்டிய எதிராக நீங்கள் வேலை செய்தால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே அந்த முடிவை நீங்கள் சேர்ந்து எடுக்க வேண்டும். அத்துடன் வெவ்வேறு பயிற்சியாளர்கள் செயல்படும் போது அவர்களை ஒரு இயக்குனர் மேற்பார்வையிட்டு இறுதி முடிவை எடுக்கும் அமைப்பை உருவாக்குவதும் அணியை கட்டமைக்க நல்ல வழியாக இருக்கும்” என்று கூறினார்.



