இதை செஞ்ச அப்றமும் கம்பீருக்கு பாராட்ட மனசில்ல.. விராட், ரோஹித்தை பற்றி பேசல.. உத்தப்பா அதிருப்தி

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை கழற்றி விட பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் முயற்சித்து வருகிறார்கள். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள்.

இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமாகும். ஆனால் அதற்கு முன் அவர்களை வயதைக் காரணமாக வைத்து தேர்வுக்குழு கழற்றி விட முயற்சிக்கிறது. அதனுடைய முதல் படியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.

- Advertisement -

மனசில்லாத கம்பீர்:

இருப்பினும் அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்தார். அடுத்ததாக தெனாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மிகவும் முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக 3 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 302 ரன்கள் குவித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று தன்னை கழற்றி விடத் துடிக்கும் கம்பீருக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் அப்போதும் 2 வருடங்கள் இருப்பதால் விராட், ரோஹித்தின் உலகக் கோப்பை இடங்கள் உறுதியாகவில்லை என்று கம்பீர் தெரிவித்தார்.

- Advertisement -

உத்தப்பா அதிருப்தி:

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்வியிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்த விராட், ரோஹித்தை பெயருக்கு கூட கௌதம் கம்பீர் பாராட்டாதது ஆச்சரியமளிப்பதாக ராபின் உத்தப்பா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அந்தத் தொடரில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 2வது டி20 நடைபெறும் முல்லான்பூர் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஏனெனில் அங்கே ரோஹித் அல்லது விராட் கோலிக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டு கொடுத்ததைப் பார்க்க முடியவில்லை. தங்களுடைய தோலுக்கு வெளியே வந்து சிறப்பாக பேட்டிங் செய்த அவர்கள் தங்களை எவ்வளவு சிறந்தவர்கள் என்பதைக் காண்பித்தனர். தங்கள் மீதான அனைத்து சந்தேகங்களையும் குறைத்த அவர்கள் விமர்சித்தவர்களின் வாய்களையும் மூடினார்கள். தற்போதைய ஃபார்மில் இந்தியாவுக்காக தங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர்கள் காண்பித்தனர். அப்படிப்பட்ட அவர்களைப் பற்றி பேசாதது வினோதமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement