அணியில் இடம்பிடித்தும் விளையாட முடியல. தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணிருக்கேன் – அதிர்ச்சி தகவலை கூறிய இந்திய நட்சத்திரம்

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. தனது கடந்த காலங்களைப் பற்றி பேசியுள்ளார் . மேலும் தான் தனியாக இருந்த காலத்தைப் பற்றியும் தன்னுடனான போராட்டத்தை பற்றியும் தற்போது பேசியுள்ளார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற போது ராபின் உத்தப்பா அந்த அணியில் இடம் பெற்று இருந்தார்.

Uthappa

- Advertisement -

அப்போது அவருக்கு வயது வெறும் 21 தான் ஆகும். அந்த கால கட்டங்களில் இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர் இவர். ஆனால் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதன் காரணமாகவும், சச்சின் டெண்டுல்கர் விரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர், ஷிகர் தவான் போன்ற அபாரமான வீரர்களிடமும் தனது துவக்க இடத்தை இழந்தார்

அதன் பின்னர் பெரிதாக இந்திய அணிக்காக அவர் ஆடியதே இல்லை எனலாம்.2009 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை தனது கஷ்டமான கால கட்டத்தை எதிர்கொண்டதாக பேசியுள்ளார் ராபின் உத்தப்பா இதுகுறித்து அவர் கூறுகையில்…

Uthappa 1

பத்து வருடங்களுக்கு முன்னர் எனக்கு என் மீதே வெறுப்பாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை எனது வாழ்க்கையின் மிக கசப்பான காலகட்டங்கள். எனக்கு அந்த நேரத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்தது. பலமுறை மருத்துவ ஆலோசனைகள் பெற்றேன்.
ஒரு முறை இந்திய அணி போட்டியில் விளையாடி கொண்டிருந்தது.

- Advertisement -

அப்போது நான் எனது வீட்டின் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் . அந்த அணியில் நான் இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாக அங்கிருந்து ஓடி விடலாம் அல்லது பால்கனியில் இருந்து குதித்து விடலாம் என்றெல்லாம் தோன்றியது.இதனை எல்லாம் கடந்து தான் தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ராபின் உத்தப்பா.

Uthappa

இவர் கடைசியாக இந்திய அணிக்காக 2015 ஆம் ஆண்டு ஆடியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருநாள் போட்டிகளில் 46 முறை இந்திய அணிக்காக ஆடி உள்ளார் அதில் 934 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 13 முறை ஆடி 249 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே பெரிதாக அவரால் சாதிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement