இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ராகுல் டிராவிட்டுக்குப் பின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இந்திய அணி இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதை விட நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணி வரலாறு காணாத வைட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அந்தத் தோல்வி ஆறுவதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மறுபுறம் இந்த தோல்விகளால் இந்திய வீரர்களிடம் கௌதம் கம்பீர் வாக்குவாதம் செய்ததாக செய்திகள் வெளியாகின.
கிரேக் சேப்பல் இல்லை:
குறிப்பாக உங்களுடைய ஆட்டத்தை போதுமான அளவுக்கு பார்த்து விட்டேன் என்று ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய வீரர்களிடம் கம்பீர் காரமாக பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியானது. அதனால் கிரேக் சேப்பல் போல கௌதம் கம்பீருடன் இந்திய அணியினர் ஒன்றாக இணைந்து செயல்படுவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சேப்பல் அளவுக்கு கம்பீர் மோசமானவர் கிடையாது என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மாறாக கௌதம் கம்பீர் மனதில் படுவதை பிடிக்காவிட்டாலும் அதை நேராக பேசக்கூடிய நேர்மையானவர் என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு. “கிரேக் சேப்பல் போல கௌதம் கம்பீர் ஸ்டைல் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். சொல்லப்போனால் நேராக பேசக்கூடிய கம்பீரை போன்ற நபரை நான் பார்த்ததில்லை”
விரைவில் வெற்றி:
“அவர் நேராக பேசக் கூடியவர். அவர் சொல்வது வேண்டுமானால் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதை அவர் உங்களுடைய முகத்துக்கு நேராக சொல்வார். அது போன்ற நபர்களை தான் நீங்களும் நானும் விரும்புவோம். என்னை பொறுத்த வரை இது போன்றவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். புறம் பேசுவதை விட இவ்வாறு நேருக்கு நேராக பேசுவது மிகவும் சிறந்தது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜடேஜாவுக்காக நட்புக்காக பொறுத்துகிட்ட அஸ்வினுக்கு.. கம்பீர் செஞ்ச அவமானமே ஓய்வுக்கு காரணம்.. பரத் அருண்
மேலும் சூரியகுமார், ரோகித் போன்ற வெவ்வேறு கேப்டன்களுடன் புதிதாக இணைந்து பணியாற்றுவதால் கம்பீர் தலைமையில் தொடர் வெற்றிகள் கிடைக்க தாமதமாவதாக உத்தப்பா கூறியுள்ளார். அதே சமயம் பும்ராவுடன் நல்ல கெமிஸ்ட்ரியை கொண்டுள்ள கம்பீர் ரோகித்தை மதிப்பதாகவும் உத்தப்பா கூறியுள்ளார். எனவே விரைவில் கம்பீர் தலைமையில் இந்தியா தொடர் வெற்றிகளை பெறும் என்றும் உத்தப்பா ஆதரவு தெரிவித்துள்ளார்.