தோனியின் இடத்திற்கு இவரே மிகக்கச்சிதமாக பொருந்துவார். ராபின் உத்தப்பா கை காட்டியது யாரை தெரியுமா ? – விவரம் இதோ

Uthappa
- Advertisement -

இந்திய அணியில் தோனி என் இடத்தை நிரப்புவது அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. 2015ம் ஆண்டிலிருந்து டோனியின் இடத்தை நிரப்ப ஒரு சரியான வீரரை தேடிக்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு வீரர் மூன்று வேலைகளைச் செய்யவேண்டும். கீப்பர், கேப்டன், அதிரடி பினிஷர் இந்த மூன்று வேலைகளுக்கும் பொருத்தமான ஒரு வீரர் தற்போது வரை கிடைக்கவில்லை.

- Advertisement -

2019ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். திறமையிருந்தும் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை. அதன் பின்னர் அந்த இடத்திற்கு கேஎல் ராகுல் வந்தார். கீப்பர் ஆக நன்றாக செயல்பட்டார். அதிரடியாக ஆடினார். ஆனால் இன்னும் டோனியின் இடத்தை நிரப்ப பிசிசிஐ ஒரு வீரரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா தோனியின் இந்த இடத்தினை சுமந்து செல்ல ஒரு இளம் வீரரை கை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொருத்தவரையில் தோனியின் இடத்திற்கு ஏற்கனவே ஒரு வீரர் இருக்கிறார். அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான வீரர் ரியான் பராக்.

Riyan

இவருக்கு தற்போது 19 வயதாகிறது. கவனிக்கப்படவேண்டிய ஒரு வீரர். தோனியின் மாற்றுக்கு மிகச் சிறந்த பதிலாக இருப்பார் என்று கூறுகிறார் ராபின் உத்தப்பா. இவர் அசாமை சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடினார். மேலும் ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

160 ரன்கள் அடித்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 24 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்திய அணியில் இவர் இடம் பிடிக்கிறாரா என்று. இருப்பினும் அவரின் திறமை மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நம்பிக்கை வைத்து அவரை பினிஷர் ரோலில் இறக்கி வருகிறது.

Riyan

அவரும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார். இந்த ஆண்டும் அவரது செயல்பாட்டினை அந்த அணி நிர்வாகம் மட்டுமின்றி இந்திய அணியும் கவனிக்க திட்டமிட்டு இருந்தது.. ஆனால் அதிர்ஷ்டாவசமின்றி இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் தள்ளி போயுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளது.

Advertisement