- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிசல்டை ஏற்கனவே பாத்துருக்கோம்.. அவரை விட கம்பீர் பயிற்சியில் இந்தியா வெற்றிகளை குவிக்கும்.. உத்தப்பா நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்று 2024 சீசனில் ஆலோசகராக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதனால் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவர் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

அப்படி பயிற்சியாளராக வந்ததும் ஹர்திக் பாண்டியாவை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து மொத்தமாக கழற்றிவிட்டுள்ள அவர் சூரியகுமாரை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் அடுத்து நடைபெறும் இலங்கைத் தொடரில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரை கழற்றிவிட்ட அவர் சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

அதிக தாக்கம்:
இந்நிலையில் ராகுல் டிராவிட்டை விட கௌதம் கம்பீர் – ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அதிக தாக்கத்துடன் விளையாடி வெற்றிகளை குவிக்கும் என்று ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் ஏற்கனவே கொல்கத்தா, லக்னோ அணிகளில் அதிக வெற்றி முடிவுகளை காண்பித்துள்ளதாகவும் உத்தப்பா பாராட்டியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“கெளதம் கம்பீர் வீரர்களை நம்ப முடியாத வகையில் கையாள்பவராக திகழ்கிறார். சமூக ஊடகங்களில் கம்பீர் மிகவும் கண்டிப்பானவர் என்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் ஜென்டில்மேன் என்று நினைக்கிறேன். எளிதாக அணுகக்கூடிய அவர் தனது வீரர்களுக்காக ஆதரவு கொடுத்து எப்போதும் கவனித்துக் கொள்வார். கேப்டனாக மட்டுமல்ல கௌதம் கம்பீர் சிறந்த ஆலோசகர் என்பதை லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளில் நான் பார்த்திருக்கிறேன்”

- Advertisement -

“அந்த இரு அணிகளுடன் அவர் உருவாக்கிய வெற்றி முடிவுகளையும் நாம் பார்த்துள்ளோம். கம்பீர் வந்ததால் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் ஸ்டைல் மாறும் என்று நான் நினைக்கவில்லை. எனவே ரோஹித் மற்றும் டிராவிட் ஆகியோர் அடங்கிய கூட்டணியை விட ரோஹித் மற்றும் கௌதம் கூட்டணி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ஒருவேளை ரிஷப் பண்ட் சி.எஸ்.கே அணிக்கு வந்தா யார் கேப்டன்? – கண்டிப்பா இதுதான் நடக்கும்

“ஏனெனில் கம்பீர் எப்போதும் அழுத்தத்தின் கீழ் செழித்தவர். பெரிய போட்டிகளில் வாய்ப்பளிக்கும் இடங்களாக பார்த்தவர். எனவே அவரை புதிய இந்திய அணியின் தலைவராக நான் பார்க்கிறேன். தம்மை போலவே தமது வீரர்களிடமிருந்தும் அவர் அதே அணுகுமுறை மற்றும் செயல் திறனை வெளிக் கொண்டுவர முயற்சிப்பார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து கம்பீர் வழிகாட்டுதலில் இந்திய அணி ஜூலை 27ஆம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -