கேப்டன்னா இவர்தான்..! கங்குலி கிடையாது.! ராபின் உத்தப்பா கூறியது இவரைத்தான்..!

இந்திய அணியில் பல்வேறு காலகட்டங்களில் பல வீரர்கள் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அவர்களில் கபில் தேவ், சவ்ரவ் குங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் தோனி போன்ற வீரர்கள் அவர்களது காலகட்டங்களில் சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளனர். இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த கேப்டன் யார் என்று இந்திய அணியின் சீனியர் வீரரான உத்தப்பா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

robi

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக டி20 தொடரில் முக்கிய பங்கு வகித்தார். அந்த கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அதற்கடுத்து சில ஆண்டுகளிலே இந்திய அணியில் இருந்து உத்தப்பா கழற்றி விடப்பட்டார். இருந்தாலும் மாநில அணி மற்றும் இந்திய ஏ அணி மேலும் IPL போன்ற தொடர்களில் இன்று வரை தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு கேப்டனாக கங்குலியை பிடிக்குமா.? அல்லது தோனியை பிடிக்குமா.? என்ற கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் தனக்கு தோனியை தான் பிடிக்கும் என்று புன்னகையுடன் பதிலளித்தார். டோனியின் வருகையால் தான் உத்தப்பா போன்ற மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வந்தனர். இருந்தாலும் தோனி அதை சரியாக பயன்படுத்தி இந்திய அணிக்கு அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று கொடுத்திருக்கிறார்.

robi msd

உத்தப்பா போன்று தோனியின் தலைமையில் கீழ் அடியவர்கள் பெரும்பாலும் டோணியையே பிடிக்கும் என்று கூறியுள்ளர்கள் என்பது குறிபிடத்தக்கது. பதட்டமான சூழ்நிலையிலும் அதனை வீரர்கள் மேல் எந்த விதத்திலும் அவர் காட்டமாட்டார். இதன் காரணமாகவே நிறைய வீரர்களுக்கு தோனியை பிடித்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.!