இங்கிலாந்து, ஆஸிக்காக மறந்து போனதை இந்திய அணியில் மீண்டும் கொண்டு வருவேன்.. கோச் ரியான் பேட்டி

Ryan Ten Doeschate
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்ட இந்தியா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கிறது.

இருப்பினும் சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது தோல்விக்கு காரணமானது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெல்ல வேண்டும் என்ற ஆழமான எண்ணம் தற்போதைய இந்திய அணியில் காணப்படுவதாக புதிய துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொஞ்சம் மறந்துட்டாங்க:

மற்றபடி ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை இயற்கையாகவே இந்தியர்களிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அதை மீண்டும் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுழல் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது என்பது நான் எதிர்பாராத மற்றும் கவனிக்காமல் போன ஒன்றாகும்”

“அதை நாங்கள் இலங்கையில் செய்யவில்லை. வெளிநாடுகளில் நன்றாக விளையாட வேண்டும் என்ற மனநிலை தற்போதைய இந்திய அணியில் காணப்படுகிறது. அதனால் சுழல் பந்துகளை எதிர்கொள்வதில் பலமாக உள்ளோம் என்ற எண்ணத்துடன் அவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு தேவையான விஷயங்களில் கவனத்தை திருப்பியுள்ளனர்”

- Advertisement -

மீண்டும் கொண்டு வருவேன்:

“அதனாலேயே அவர்கள் இலங்கையில் கொஞ்சம் கீழே விழுந்தனர். எனவே இந்தியர்களை மீண்டும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் சிறந்தவர்களாக கொண்டு வரவேண்டும் என்பதே நான் அவர்களுக்கு உதவ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயமாகும். அதற்காக இந்திய வீரர்களிடம் டெக்னிக்கல் அறிவை கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கும் என்று நான் கருதவில்லை”

இதையும் படிங்க: 16/3 டூ 158.. கோட்டை விட்ட வங்கதேசம்.. மீட்டெடுத்த பாகிஸ்தான் வீரர் 65 வருட அதிவேக சாதனை சமன்

“அது மனநிலை, சூழ்நிலை விழிப்புணர்வு, போட்டியின் குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தது. அது அதைப்பற்றிய யோசனைகளை விளக்கி மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்திய அணியின் பயிற்சியாளராக அடுத்த 18 மாதங்கள் எனக்கு சுவாரஸ்யமானதாக இருக்கும். அது நீங்கள் பங்கேற்க விரும்பும் தொடர்கள் மற்றும் நீங்கள் எதிர்கொள்ள விரும்பும் அனைத்து சவால்களாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement