சின்ன வயசுல இருந்து நான் கண்ட கனவு இது.. இப்போ நிறைவேறிதில் மகிழ்ச்சி – ரியான் பராக் மகிழ்ச்சி

Parag
- Advertisement -

அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை அணியில் உள்ள சீனியர் வீரர்கள் பெரும்பாலானோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட 15 பேர் கொண்ட இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு புறப்பட்டு சென்றது.

அந்த அணிக்கு லட்சுமணன் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்த தொடரில் சுப்மன் கில் தலைமையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 573 ரன்கள் அடித்த அசத்திய ரியான் பராக்கிற்கும் இந்த இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று ஐபிஎல் தொடரின் போதே பேசப்பட்டு வந்த இவரை ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் பி.சி.சி.ஐ தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்காக தான் முதல் முறையாக விளையாட இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரியான் பராக் கூறியதாவது : இந்திய அணியில் இடம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்டவற்றை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.

- Advertisement -

குழந்தையாக இருக்கும் போதிலிருந்து இந்திய அணிக்காக விளையாடிய விட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. அந்த கனவு தற்போது இந்திய நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து பயிற்சி செய்வதே ஒரு சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலி ஒரு பவர்ஹவுஸ்.. அவரை பாத்து தான் 2022இல் இதை கத்துக்கிட்டேன்.. சூர்யகுமார் வெளிப்படை

அசாம் மாநிலத்தில் பிறந்த சில ஆண்டுகளில் இருந்தே இந்த கனவு என்னுள் இருந்து வந்தது. தற்போது எனது கனவை எட்டிப் பிடித்துள்ளேன். ஜிம்பாப்வே மைதானத்திற்கு எனது இதயத்தில் ஸ்பெஷலான இடம் இருக்கிறது. இந்த மைதானத்தில் நான் அறிமுகமாவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி என ரியான் பராக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement