இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நிறைவு பெற்ற டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே ஒயிட்வாஷ் வெற்றியை பெற்று இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துங்கியுள்ளது. முன்னதாக பல்லக்கேல் நகரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்தது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 39, வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக 26, குசால் மெண்டிஸ் 43, குசால் பெரேரா 46 ரன்கள் எடுத்தனர்.
சூர்யாவின் ட்விஸ்ட்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், கேப்டன் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் 2 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தர் இலங்கையை சுருட்டினார். அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்களை துரத்திய இந்தியாவை கேப்டன் சூரியகுமார் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
முன்னதாக முதல் போட்டியை போலவே இப்போட்டியிலும் ரியான் பராக் 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாக பந்து வீசினார். அந்த வாய்ப்பை சூரியகுமார் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் ஸ்டம்ப் லைனில் பந்துகளை மட்டுமே வீசி இலங்கைக்கு சவால் கொடுத்ததாக கூறினார். அத்துடன் கடைசி ஓவரை சிராஜ்க்கு பதிலாக வீசி சூரியகுமார் டிவிஸ்ட் வைத்ததாகவும் பாராட்டும் ரியான் பராக் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“கடைசி வரை நான் பேட்டிங் செய்திருந்தால் 160 ரன்கள் எடுத்திருப்போம். அதனால் நான் ஏமாற்றத்தை சந்தித்தாலும் 130 ரன்கள் எடுத்த நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். இந்த பிட்ச்சில் மிகவும் சிம்பிளாக ஸ்டம்ப் லைனில் பந்து வீச விரும்பினோம். வலைப்பயிற்சியிலும் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் லெக் பிரேக் பந்துகளை முயற்சித்து வருகிறேன். அது எனக்கு நன்றாக வருகிறது”
இதையும் படிங்க: 19 ஓவரை ரிங்கு.. 20வது ஓவரை சிராஜுக்கு பதில் தாம் வீசியது ஏன்? கேப்டன் சூரியகுமார் விளக்கம்
“இன்றும் சூர்யா பாய் “நீ போடு” என்று சொன்னார். அது எனக்கு வந்தது. அது வேடிக்கையாக இருந்தது. நாங்கள் பதற்றமாக உணரவில்லை. நாங்கள் அதை மிகவும் தன்னிச்சையான முறையில் திட்டமிட்டோம். சிராஜ் கடைசி ஓவரை வீசப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் சூர்யா பாய் தன்னுடைய கையை சுழற்ற முடிவு செய்தார். வெற்றியே எங்களுடைய குறிக்கோள். நாங்கள் அதற்காக கடினமாக விளையாடுகிறோம்” என்று கூறினார்.



