
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரும் ரசிகர்களின் பெரிய வரவேற்புக்கு மத்தியில் இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிர நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெறயிருக்கும் இந்த 2026 ஐ.பி.எல் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமும் நடைபெற்று முடிந்தது. அந்த மினி ஏலத்தில் அனைத்து அணிகளிலும் வீரர்களின் இடமாற்றம் நிகழ்ந்தது.
அப்படி நடைபெற்ற மினி ஏலத்திற்கு பிறகு தற்போது அனைத்து அணிகளும் தங்களது முழு அணியை அறிவித்துவிட்ட வேளையில் இன்னும் சில மாதங்களில் நடைபெறயிருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளின் கேப்டன்களும் யார்? என்பதை ஒவ்வொரு அணியாக அறிவித்து வருகின்றன. அந்த வகையில் 2008-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் அணி இந்த ஆண்டிற்கான தங்களது கேப்டனை அறிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறுவதற்காக போராடி வரும் ராஜஸ்தான் அணியிலிருந்து கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டதால் ராஜஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய கேப்டன் பதவிக்காக ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், ரியான் பராக் போன்ற பலவீரர்கள் போட்டியில் இருந்தனர்.
இதையும் படிங்க : என்னடா ஆஸ்திரேலியாவுக்கு வந்த சோதனை.. தண்ணி காட்டிய ஜிம்பாப்வே – முதல் அட்டகாசமான அப்செட்
இவ்வேளையில் இளம் வீரரான ரியான் பராக் தான் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக விளையாடுவார் என அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சஞ்சு சாம்சன் காயத்தால் தவறவிட்ட போட்டிகளில் ரியான் பராக்கே கேப்டனாக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.