கிண்டலை கடந்து போராடி முன்னேறும் ரியன் பராக்.. சஞ்சு சாம்சனை முந்தி இளம் இந்திய புயலாக சாதனை

Riyan Parag 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 9வது லீக் போட்டியில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரியன் பராக் 84* (45) ரன்கள் எடுத்த உதவியுடன் டெல்லி வெற்றி பெறுவதற்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேச்சிங் செய்த டெல்லி தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 173/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 44* ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால், நன்ரே பர்கர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். இந்த வெற்றிக்கு 36/3 என ராஜஸ்தான் தடுமாறிய போது அபாரமாக விளையாடி 84* ரன்கள் குவித்த ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இளம் புயலாக:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்ட அவர் பல்வேறு தருணங்களில் விராட் கோலியை போல் பேசுவது, நடுவர்களை கலாய்ப்பது, முன்னாள் வீரர்களை மறைமுகமாக கிண்டலடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார்.

அதனால் வாயில் பேசாமல் அடக்கமாக இருந்து செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர். அந்த நிலையில் கடந்த வருடங்களில் 6, 7 போன்ற கீழ் வரிசையில் விளையாடி வந்த அவருக்கு இம்முறை ராஜஸ்தான் நிர்வாகம் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தது. அதில் லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 43 (29) ரன்கள் அடித்து அசத்திய அவர் இப்போட்டியில் அபாரமாக விளையாடி 84* ரன்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சொந்த சாதனை படைத்தார்.

- Advertisement -

அதனால் கிண்டல்களை உடைத்துள்ள அவர் தம்மாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதால் தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் 22 வருடம் 139 வயதாகும் அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் 56, உள்ளூர் தொடரில் 44 என மொத்தமாக 100 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 100 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் 2 வருஷத்துல ரியன் பராக் அதையும் சாதிப்பாரு.. இஷானுக்கு இர்பான் பதான் மறைமுக அறிவுரை

ஆரம்பத்தில் அனைவருமே தடுமாறுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக 5 வருடங்களாக திணறிய அவர் தற்போது இலை. புயலாக முன்னேறி வருகிறார் என்றே சொல்லலாம். அவர் படைத்துள்ள அந்த சாதனையின் பட்டியல்:
1. ரியன் பராக் : 22 வருடம் 139 நாட்கள்*
2. சஞ்சு சாம்சன் : 22 வருடம் 157 நாட்கள்
3. வாஷிங்டன் சுந்தர் : 22 வருடம் 181 நாட்கள்
4. இசான் கிசான் : 22 வருடம் 273 நாட்கள்
5. ரிசப் பண்ட் : 22 வருடம் 361 நாட்கள்

Advertisement