நீங்க என்ன என்னை நீக்குவது? வங்கதேசத்துக்கு நான் வரல.. இந்திய தொகுப்பாளினி பதிலடி அறிவிப்பு

Rithima Pathak
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் தங்கள் போட்டிகளை இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேசம் வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் தங்களது போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஐசிசி அமைப்புக்கு வங்கதேச வாரியம் கோரிக்கையும் வைத்துள்ளது.

சமீபத்தில் வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் இயற்கை எய்தியதாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு இந்தியாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்துடன் வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்றும் எதிர்ப்புகள் எழுந்தன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நிர்வாகத்திற்கு பிசிசிஐ கெடு விதித்தது.

- Advertisement -

நீங்க என்ன என்னை நீக்குவது:

அதை ஏற்றுக்கொண்ட கொல்கத்தா நிர்வாகம் 9.20 கோடிக்கு வாங்கிய ரஹ்மானை தங்களது அணியிலிருந்து விடுவித்தது. அதற்கு பதிலடியாகவே இந்தியாவுக்கு வந்து டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள வங்கதேசம் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கதேசத்தில் நடைபெறும் பிபிஎல் டி20 தொடரை இந்தியாவை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி ரித்திமா பதக் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்தியாவுக்கு பதிலடியாக அவரையும் பிபிஎல் தொடரை தொகுத்து வழங்குவதிலிருந்து வங்கதேச வாரியம் நீக்கியுள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் வங்கதேசத்தில் நடைபெறும் பிபிஎல் தொடரை தொகுத்து வழங்குவதிலிருந்து தாமாக விலகியுள்ளதாக ரித்திமா தெரிவித்துள்ளார். அத்துடன் வங்கதேச வாரியம் தம்மை நீக்கியுள்ளது என்ற செய்திகள் தவறானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

- Advertisement -

நான் வங்கதேசம் வரல:

இது பற்றி ரித்திமா வெளியிட்டுள்ள அறிக்கையில். “கடந்த சில மணி நேரங்களாக பிபிஎல் தொடரிலிருந்து நான் நீக்கப்பட்டேன் என்ற கதை வலம் வருகின்றது. அது உண்மை கிடையாது. உண்மையில் நான் தனிப்பட்ட முறையில் அந்தத் தொடரிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் எனக்கு எப்போதுமே நாடு தான் முன்னுரிமையாகும். எந்த ஒரு பணியையும் விட நான் கிரிக்கெட்டை மிகவும் மதிக்கிறேன்”

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடை கடந்து அசத்தலான சாதனையை நிகழ்த்திய – ஸ்டீவ் ஸ்மித்

“இந்த விளையாட்டில் பல ஆண்டுகளாக நேர்மை, மரியாதை மற்றும் ஆர்வத்துடன் சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அது எப்போதும் மாறாது. நேர்மைக்காகவும் தெளிவுக்காகவும் விளையாட்டின் உணர்வுக்காகவும் தொடர்ந்து நான் நிலை நிற்பேன்” என்று கூறினார். இதிலிருந்து நீங்கள் என்ன என்னை நீக்குவது, உங்கள் நாட்டுக்கு நான் வரவில்லை என்ற வகையில் வங்கதேசத்துக்கு ரித்திமா பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement