ராகுல் டிராவிடை அப்படியே இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக மாற்றுங்கள் – முன்னாள் வீரர் கருத்து

Dravid

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக பயிற்சியாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். அவரின் தலைமையின் கீழ் பயிற்சி பெற்ற இளம் வீரர்கள் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முதன்மை அணியானது இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகின்ற இவ்வேளையில் இலங்கை அணிக்கு எதிரான இளம் வீரர்களை கொன்ற மற்றொரு அணி இலங்கை சென்று விளையாடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

sl

அதன்படி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தவான் தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியின் கீழ் இலங்கை செல்கிறது. இந்த தொடரில் ராகுல் டிராவிட் முதன்மை பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே டிராவிட் தற்காலிக கோச்சாக மாறியுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்காலிக பயிற்சியாளர் பதவியை நிரந்தர பயிற்சியாளராக நியமிக்க பல்வேறு ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரித்வீந்தர் சோதி : ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் முழுநேர பயிற்சியாளராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

dravid

மேலும் ராகுல் டிராவிட் குடும்பத்துடன் இருந்திருக்க நினைத்திருந்தால் இப்போது இலங்கை சென்று இருக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார் எனவே அவரை இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முழு நேர பயிற்சியாளர் ஆக மாற்ற வேண்டும் என்று தனது கருத்தினை அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement