டி20 உலகக்கோப்பை : 15 பேர்கொண்ட இந்திய அணியை தேர்வு செய்த ரிதீந்தர் சோதி – லிஸ்ட் இதோ

Sodhi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Cup

- Advertisement -

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணியை தேர்ந்தெடுத்து வரும் வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்குபெறும் 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

அதில் ரோஹித் மற்றும் ராகுலை ஓபனராக தேர்வு செய்துள்ள அவர் ஷிகர் தவானை மாற்று துவக்க வீரராக தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மேலும் ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Rahul

மேலும் ஸ்பின்னர்களாக ராகுல் சாகர் மற்றும் சாகல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியவை தேர்வு செய்துள்ளார். ரித்தீந்தர் சோதி தேர்வு செய்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) ஷிகர் தவான், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) ஜடேஜா, 8) ஹார்டிக் பாண்டியா, 9) சிராஜ், 10) பும்ரா, 11)புவனேஷ்வர் குமார், 12) ராகுல் சாகர், 13) சாஹல், 14) ரிஷப் பண்ட், 15) தீபக் சாகர்

Advertisement