ஆஸ்திரேலிய தொடரை தொடர்ந்து இம்முறையும் அசத்திய ரிஷப் பண்ட். ஆனால் சின்ன வருத்தம் – ரசிகர்கள் பாராட்டு

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

root 2

- Advertisement -

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இன்று மேலும் 23 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் 218 ரன்களையும், சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பாக பவுலிங்கில் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் மற்றும் நதீம் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரோகித் சர்மா 6 ரன்களிலும், கில் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து பெரிய அளவு ரன்களை குவித்தனர்.

pant 2

புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன்பின்னரும் பண்ட் அதிரடி காட்ட 88 பந்துகளை சந்தித்த நிலையில் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 91 ரன்கள் எடுத்து ஆட்டம் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ரிஷப் பண்ட் இம்முறையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு ரன் சேர்த்தது மட்டுமின்றி இங்கிலாந்து அணியை பயமுறுத்தினர்.

pant 1

அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி வரும் விஷப் பண்டின் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இருப்பினும் இம்முறையும் சதமடிக்க எளிதான வாய்ப்பு இருந்தும் அதனை தவறவிட்டது ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement