அதுக்குள்ள ரிஷப் பண்ட் ரெடியாகிடுவாரு.. இனிமேலும் நீங்க யோசிக்க ஒன்னுமில்ல.. கெவின் பீட்டர்சன் கருத்து

Kevin Pieterson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத்தை 89 ரன்களுக்கு சுருட்டிய டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 2 கேட்சுகள் பிடித்து 2 ஸ்டம்பிங் செய்து பேட்டிங்கில் 16* ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்த ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐபிஎல், உலகக் கோப்பை தொடர்களில் விளையாடவில்லை. மேலும் காயத்திலிருந்து குணமடைந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினார். அதனால் அடிக்கடி குனிந்து நிமிர வேண்டிய விக்கெட் கீப்பிங் வேலையில் அவரால் அசத்த முடியுமா என்ற கேள்வி காணப்பட்டது.

- Advertisement -

ரெடியா இருக்காரு:
ஆனால் இப்போட்டியில் அந்த கேள்வியை உடைத்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல பேட்டிங்கில் 7 போட்டிகளில் 210* ரன்களை 156.72 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் பழைய ஃபார்முக்கு திரும்பி 5 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் முழுமையாக விளையாடுவதற்கு தகுதியாக உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். எனவே ஐபிஎல் தொடர் முடியும் போது 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் தயாராக இருப்பார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதனால் அவரை உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்க இந்தியா யோசிக்க கூடாது என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் நன்றாக வேலை செய்கிறார். இன்றிரவு விளையாடிய விதம் அவருக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய ஆட்டம் இந்திய அணிக்கும் பெரிய அணிக்கும் ஊக்கமாக இருந்திருக்கும். மிகப்பெரிய காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவருக்கு போட்டியில் விளையாடுவதற்கு தேவையான நேரம் தேவைப்பட்டது”

இதையும் படிங்க: சிஎஸ்கே அணியில் கலக்கும் துபேவின்.. 2024 டி20 உ.கோ இடத்துக்கு அது மட்டுமே தடையா இருக்கும்.. ஏபிடி பேட்டி

“அவர் ஒரு மோசமான காயத்திலிருந்து திரும்பி வருகிறார். எனவே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக அவருக்கு 14 – 17 போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் தேவை. டி20 உலகக் கோப்பையில் விளையாட செல்வது பெரிய விஷயம். எனவே டெல்லி அணி அதிக போட்டிகளில் விளையாடுவது ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதற்கான சூழலை உருவாக்கும்” என்று கூறினார்.

Advertisement