- Advertisement -
இந்திய கிரிக்கெட்

122 ரன்கள் அடித்தால் போதும்.. ரோஹித் மற்றும் கோலியின் சாதனையை காலி செய்ய காத்திருக்கும் – ரிஷப் பண்ட்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். அவரது அந்த ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை முந்த காத்திருக்கும் ரிஷப் பண்ட் :

அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்சின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 65 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் சார்பாக நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராகவும் உள்ளார்.

இந்நிலையில் நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கும் அவர் முன்னாள் இந்திய ஜாம்பவான்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரது சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகிய அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்தவிருக்கும் சாதனை யாதெனில் : இந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேலும் 122 ரன்கள் அவர் அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களாக முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை முந்த வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவை அச்சுறுத்த ஒரு முக்கிய மாற்றத்துடன் பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி – லிஸ்ட் இதோ

இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ள வேளையில் 2594 ரன்களுடன் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார். எனவே மேலும் 122 ரன்களை அடிக்கும் பட்சத்தில் அவர் இந்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -