முக்கியமான 19 ஆவது வீரரை ராஷிக் டார் சலாமை வீசவைக்க காரணம் இதுதான் – ரிஷப் பண்ட் ஓபன்டாக்

Pant
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40-ஆவது லீக் போட்டியில் பங்கேற்று விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. அதோடு இந்த வெற்றியின் மூலம் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு குஜராத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 225 ரன்கள் என்கிற மிகப்பெரிய இலக்கினை நோக்கி விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன்காரணமாக டெல்லி அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்தும் முக்கியமான 19-வது ஓவரை ராசிக் வீச என்ன காரணம்? என்பது குறித்தும் பல்வேறு தகவல்களை ரிஷப் பண்ட் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் நோர்க்கியா சற்று சுமாரான பந்துவீச்சு வெளிப்படுத்தினார். அவரது பார்ம் இன்று கடினமாக இருந்தது. முதல் 14-15 ஓவர்கள் வரை பந்து நன்றாக வந்தது. அதோடு ராஷிக்கின் பந்துவீச்சு இன்று நன்றாக இருந்தது. எனவே நாங்கள் ராசிக் பந்துவீசுவதே சரியாக இருக்கும் என்று நம்பினோம். ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இந்த போட்டியில் ராஷிக்-க்கு பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. எனவே தான் அவருக்கு 19-ஆவது ஓவரை வழங்கினேன்.

இதையும் படிங்க : டெல்லி அணிக்கெதிராக நாங்க தோக்க அந்த 2 ஓவர்தான் காரணம்.. இதுல அந்த ரூல்ஸ் வேற – தோல்வி குறித்து கில் வருத்தம்

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது என ரிஷப் பண்ட் கூறினார். அவர் கூறியது போன்றே இந்த போட்டியில் மொத்தமாக நான்கு ஓர்களை வீசிய ராஷித் டார் சலாம் 44 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அதிலும் குறிப்பாக தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement