73 பந்துகளில் நான் அதிரடி சதத்தை விளாச இதுவே காரணம் – பயிற்சி போட்டியில் நடந்த சுவாரசியத்தை பகிர்ந்த பண்ட்

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் துவங்க உள்ளது. 17ஆம் தேதி துவங்கும் இந்த போட்டி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னதாக தற்போது இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மூன்று நாள் பயிற்சி போட்டி சிட்னியில் நடைபெற்று முடிந்தது. பயிற்சி போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாட ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

INDvsAUS

- Advertisement -

இந்த போட்டியின் 2-வது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் விஹாரி சதம் அடித்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 81 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தபோது 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வர 2 ஓவர்கள் மட்டுமே இருந்தது. இதன் காரணமாக கடைசி ஓவரில் 19 ரன்கள் அடித்தால் சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 73 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் தான் அப்படி கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க காரணம் என்னவென்று பண்ட் இப்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சதம் எடுக்க 20 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். என்னுடைய முதல் ரியாக்ஷன் என்னால் இந்த ரன்களை குவிக்க முடியாது என்பதுதான். ஆனால் முதல் பந்து என்னுடைய வயிற்றுப் பகுதியில் தாக்கியது.

Pant 1

அதன் பின்னர் நான் கோபமடைந்தேன். அந்த கோபத்தின் வெளிப்பாடாக நான் ஓரிரண்டு ஷாட்டுகளை விளையாட வேண்டும் என நினைத்தேன். அப்போது ஹனுமா விஹாரி என்னிடம் வந்து உன்னால் சதத்தை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறினார். முயற்சி செய்து பார் என்று எனக்கு ஆதரவு தந்தார். மேலும் அப்படி செய்தால் நாளை காலை எந்த அவசரமும் இல்லாமல் விளையாடலாம் என்று கூறினார்.

Pant

நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சதத்தை அடைய முடியும் என்றால் அது சிறந்ததாக இருக்கும். பவுலர் பந்து வீசினார் நான் எனது ஷாட்டுகளை அடித்தேன் என்று பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது. பண்ட் மற்றும் சஹா ஆகிய இருவருக்கும் இடையே இந்த டெஸ்ட் தொடரில் யார் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார்கள் என்ற போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement