சென்னையில் இந்த விடயம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி.. நான் எமோஷனல் ஆயிட்டேன் – ரிஷப் பண்ட் உருக்கம்

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அந்த விபத்திற்கு பிறகு மீண்டும் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம்தான் என்று பலரும் கவலை தெரிவித்திருந்தனர்.

மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில் மகிழ்ச்சி :

அவ்வேளையில் வெகுவிரைவாக படிப்படியாக முன்னேற்றம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது கம்பேக் கொடுத்திருந்தார். அப்படி கம்பேக் கொடுத்த முதல் தொடரிலேயே 400 ரன்களுக்கு மேல் விளாசிய ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராகவும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடமும் கிடைத்தது.

- Advertisement -

அந்த டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் அசத்தலாக செயல்பட்ட வேளையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போதும் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்க்கு திரும்பியிருந்தார். இந்நிலையில் தற்போது 21 மாதங்கள் கழித்து வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் கம்பேக் கொடுத்து விளையாடி வருகிறார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் அவர் 39 ரன்களை குவித்திருந்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின்போது 109 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்க்கு மீண்டும் திரும்பிய உடனே தனது வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்டின் ஆட்டம் குறித்து பலரும் பாராட்டினை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த சிறப்பான தருணத்தை பற்றி பேசியுள்ள ரிஷப் பண்ட் கூறுகையில் : நிச்சயம் சென்னை டெஸ்ட் போட்டி எனக்கு ஒரு எமோஷனலாக தருணமாக இருந்தது. நான் மீண்டும் திரும்பி வந்து ஒரு பெரிய ஸ்கோர் எடுக்க விரும்பினேன்.

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் என்னால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய மிகவும் விரும்பினேன். அதிலும் குறிப்பாக என்னுடைய கம்பேக் டெஸ்ட் சென்னையில் நடைபெற்ற போது மிகவும் எமோஷனலாக இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் நான் களத்தில் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு கோபத்துடன் டிவியை உடைத்த தோனி – பத்திரிக்கையாளர் தகவல்

நான் டேட்டிங் செய்ததை விட ஐந்து நாட்களும் மைதானத்தில் இருந்து விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இந்த டெஸ்ட் கம்பேக் என்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று ஏனெனில் நான் எப்போதுமே சென்னையில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். மூன்று வகையான போட்டிகளிலும் மீண்டும் திரும்பி வந்து விளையாட வேண்டும் என்று நினைத்தேன் அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கும் நான் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement