இங்கிலாந்து ரசிகர்கள் செய்த செயலால் கோலி அப்செட் ஆகிவிட்டார் – ரிஷப் பண்ட் வெளிப்படை

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 78 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 19 ரன்களும், ரகானே 18 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 120 ரன்களை குவித்தது.

burns

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி தற்போது 42 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் குறைவான ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது அவர்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜை நோக்கி இங்கிலாந்து ரசிகர்கள் ஆவேசமாக சில கருத்துக்களை பெவிலியனிலி ருந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் சிராஜை நோக்கி உங்களது அணி எத்தனை ரன்களை அடித்தது என்று கேட்டார்கள். அதற்கு பதிலடி கொடுத்த சிராஜ் 1-0 என்று தனது செய்கையின் மூலம் பதிலடி கொடுத்தார்.

siraj

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்நாள் ஆட்டம் முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்திய வீரர் சிராஜை நோக்கி பார்வையாளர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர். இது கிரிக்கெட்டில் சகஜமான விடயம் என்றாலும் உண்மையாக இது ஆரோக்கியமான விடயம் கிடையாது.

siraj 1

வீரர்களை சீண்டலாம் ஆனால் எந்தப் பொருள்களையும் அவர்கள் மீது எறிய கூடாது. இதையெல்லாம் மீறி இங்கிலாந்து வீரர்கள் சிராஜை நோக்கி பந்தினை ஏறிந்து முறைகேடான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட கேப்டன் விராத் கோலி சற்று கோபம் அடைந்தார். மேலும் இது கிரிக்கெட்டுக்கு சரியான விஷயம் கிடையாது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement