இந்திய அணியில் நான் விளையாட இவரது ஒத்துழைப்பே அதிகம். அவர் என் பின்னால் இருக்கும்வரை ஒன்னும் பண்ணமுடியாது – பண்ட் ஓபன் டாக்

Pant-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது விக்கெட் கீப்பராக இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் அதிரடியாக ஆடக்கூடிய வல்லமை படைத்தவர். இந்தியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து இந்திய அணியில் தற்போது இடம் பிடித்தவர். ஆனால், தோனி அணியை விட்டு வெளியேறி விட்டதால் அவரது இடத்தை நிரப்ப தற்போது பெரும் சிரமப்பட்டு வருகிறார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு சுலபமல்ல. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் பண்ட் ஒரு பந்தை விட்டால் கூட ‘தோனி, தோனி’ என்று ரசிகர்கள் கத்த ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் பன்ட். இந்நிலையில் சமீபத்தில் தோனி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் ரிஷப் பண்ட். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கிரிக்கெட் ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் ஒரு மிகச் சிறந்த ஆலோசகர். எந்த ஒரு பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு கிடைக்கும். ஆனால் முழுமையான தீர்வை எப்போதும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அப்படி சொல்லி விட்டால், அவரை நம்பியே நாம் இருப்போம் என்று நினைத்துக் கொள்வார். ஒரு சில குறிப்புகளை மட்டுமே கொடுப்பார்.

Pant

அவர் களத்தில் இருக்கையில், அவர் சொல்லும் திட்டத்தை நாம் சரியாக பின்பற்றினால் போதும். எளிதாக வெற்றி பெறலாம். அவர் ஆடுகளத்தில் எனக்கு மிகச் சிறந்த ஆலோசகராக இருக்கிறார். என்று கூறியுள்ளார் ரிஷப் பண்ட். களத்தில் மட்டுமின்றி தோனி பண்டினை தனது ராஞ்சி வீட்டிற்கும் அழைத்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதுகுறித்த செய்தி மட்டுமின்றி புகைப்படங்களும் அப்போது வெளியாகி வைரலாகின.

- Advertisement -

ரிஷப் பண்ட் தற்போது கோலி தலைமையில் விளையாடி வருகிறார். எப்போதும் எந்த ஒரு வீரரும் தனது கேப்டனை விட்டுவிட்டு முன்னாள் வீரருக்கு இப்படி புகழாரம் சூட்ட மாட்டார்கள், ஆனால் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டனை புகழ்ந்து பேசியுள்ளார் இதனால் கோலி ரசிகர்கள் சற்று சலசலப்பில் இருக்கின்றனர்.

Pant 1

சமீபத்திய பல தொடர்களாக பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் பண்ட் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய தொடரில் விக்கெட் கீப்பிங் செய்த ராகுல் தற்போது இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் பண்டிடம் உள்ள திறமைக்கு நிச்சயம் அவர் மீண்டும் அணியில் விரைவில் விளையாடுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Advertisement