இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் வேலையில் மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 25-ஆம் தேதி நேற்று துவங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சை சந்திக்க முடியாமல் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் சாம் கரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன் பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 120 ரன்களை குவித்தது. விக்கெட் இழப்பின்றி விளையாடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஹஸீப் ஹமீது 60 ரன்களும், பர்ன்ஸ் 52 ரன்களும் குவித்தனர்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 42 ரன்கள் முன்னிலை நிலைபெற்றது. அதுமட்டுமின்றி கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளது. இந்த முதல் நாள் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைதேர்வு செய்ததே இந்திய அணியின் அணியின் இந்த சருக்களுக்கு காரணம் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர், இதன் காரணமாக கேப்டன் கோலியின் இந்த டாஸ் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் டாஸ் தேர்வு குறித்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் பேட்டிங் செய்யும் முடிவு எடுத்தது அணியின் ஒட்டுமொத்த முடிவாகும். முதல் நாள் ஆட்டம் பந்துவீச்சுக்கு உகந்த நிலையில் இருந்தது இதனை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் எங்களை கட்டுப்படுத்தினர்.

முதலில் பேட்டிங் செய்வது எங்களது அனைவரது விருப்பம் எந்த முடிவாக இருந்தாலும் அது அணியை சார்ந்ததுதான். கேப்டன் மட்டும் முடிவு எடுப்பது இல்லை. தினமும் பேட்டிங் என்பது 100% சிறப்பானதாக இருக்காது. சில நேரங்களில் ஏற்படும் சறுக்கல்களை நாம் தடுக்க முடியாது. அந்த தவறிலிருந்து முன்னேற வேண்டும். இதனால் கேப்டன் கோலி எடுத்த இந்த முடிவில் எந்த தவறும் இல்லை என ரிஷப் பண்ட் கோலிக்கு சப்போர்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



