இரவில் 6 மணிநேரம் பேருந்து பயணம். தாயின் வருமானம் மட்டுமே. இன்று கோடீஸ்வரர் – விவரம் இதோ

Raina
- Advertisement -

இந்திய அணிக்கு மூன்று வகையான போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்து அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடி அதன் பின்னர் இந்திய அணிக்கு முன்னேறியவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் 2016ம் ஆண்டு அற்புதமாக ஆடி பல சாதனைகள் படைத்தார்.

- Advertisement -

அதே தொடரில் 54 பந்துகளில் சதம் விளாசிய இவர். அதன் பின்னர்தான் டெல்லி ஐபிஎல் அணி அவருக்கு கைகொடுத்தது. இவர் உண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். உத்தர்காண்ட் மாநிலத்தில் ரஞ்சி கோப்பை அணி இல்லாததால் அவர் தினமும் கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் டெல்லிக்கு சென்று ஆடி ஆடியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ள தகவலில் : உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் நான். தினமும் டெல்லிக்கு பயிற்சிக்கு வர வேண்டும். இதனால் காலை 2 மணிக்கு பேருந்தை பிடிக்க வேண்டும். அப்போது பிடித்தால் அதன் பின்னர் 6 மணி நேரம் பயணம் செய்து டெல்லிக்கு சென்று அங்கும் வேகவேகமாக பயிற்சி செய்துவிட்டு மீண்டும் 6 மணி நேரம் பயணம் செய்து வீட்டிற்கு திரும்புவேன்.

Rishabh pant

இப்படித்தான் என் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. அதன் பின்னர் டெல்லி ஐபிஎல் அணி கைகொடுத்து. தற்போது ஓரளவிற்கு நன்றாக இருக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார் பன்ட். டெல்லி அணிக்காக முதல் முறை தேர்வான போதே 1 கோடியே 90 லட்சம் ஏலம் போகி அந்த தொடரிலேயே கோடீஸ்வரர் ஆனார். அதன்பின்னர் தற்போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார்.

சமீப காலமாக இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும். அவர் மீது நம்பிக்கை வைத்து இன்னும் அணியில் வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். ஏனெனில் ஐபிஎல் தொடரில் பல வாண வேடிக்கைகளை காட்டியவர் இவர். மேலும் இந்திய அணியின் எதிர்காலம் ஆக பார்க்கப்படுபவர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement