
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடி வந்த ரிஷப் பண்ட்டை 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 27 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு விலைக்கு வாங்கியது. அதனால் அதே ஆண்டு அவர் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த 2026 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியானது 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 10-ஆம் இடத்தைப் பிடித்து வெளியேறியது.
கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய லக்னோ அணி இந்த ஆண்டும் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியதால் அந்த அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதோடு லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.
இவ்வேளையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு தானாக முன்வந்து லக்னோ அணியின் கேப்டன் பதவியை ரிசப் பண்ட் துறந்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே லக்னோ அணி மோசமாக செயல்பட்டு வருவதால் கேப்டன் என்கிற முறையில் தான் அதற்கு பொறுப்பேற்று தன்னை கேப்டன்சியில் இருந்து விடுவிக்குமாறு ரிஷப் பண்ட் கேட்டுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நிர்வாகமும் தலைமை பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அவரது முடிவு குறித்து பேசிய லக்னோ அணியின் இயக்குனர் டாம் மூடி கூறுகையில் : ரிஷப் பண்டின் கோரிக்கையை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக் கொண்டோம். இத்தகைய முடிவு எளிதல்ல.
இதையும் படிங்க : ரிஷப் பண்டை லக்னோ அணி வெளியேற்றினால் இதுதான் நடக்கும் – சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து
கேப்டனாக அவர் அளித்த பங்கிற்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். எங்களது அணியில் மறு சீரமைப்பு செய்ய இருக்கிறோம் என்று டாம் மூடி தெரிவித்தார். இந்த ஆண்டு 2026 ஐ.பி.எல் தொடரின் 13 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 312 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.