இப்படி பண்றதுக்கு ஒழுங்கா கீப்பிங் பிராக்டிஸ் ஆவது செய்யலாம் – பண்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Pant

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆன ரிஷப் பண்ட் தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் செயல்பட்டு வருகிறார். அவர் அறிமுகமான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் அதன்பின்னர் கடந்த தொடர்களில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Pant

கடந்த பல தொடர்களாகவே அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சொதப்பிவரும் பண்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்யலாம் என்று ரசிகர்கள் கூறி வந்த போதும் அணி நிர்வாகம் அவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அவருக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

மேலும் இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையிலும் அவரே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுத்து வருகிறது. ஆனாலும் அதனை சரியாக பயன்படுத்தாத பண்ட் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஜிம் பயிற்சி நேரத்தில் உடற்பயிற்சியாளர் உடன் பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்றினை அவர் கிண்டலாக வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் இப்படி பாக்ஸிங் செய்து கிண்டல் செய்வதை விட இந்த நேரத்தை ஒழுங்காக கீப்பிங் பயிற்சி செய்து செலவிடலாம் என்று அவரை கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -